தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 29 september 2011

நாடு கடத்தப்படும் இலங்கையர்களின் பாதுகாப்பை பிரித்தானியா கருத்திற்கொள்ளவில்லை – டெய்லி டெலிகிராப்

[ வியாழக்கிழமை, 29 செப்ரெம்பர் 2011, 01:01.57 AM GMT ]
தாம் நாடு கடத்தும் தமிழர்களின் பாதுகாப்பை பிரித்தானிய அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை என்று பிரித்தானிய டெய்லி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
அடைக்கல கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 50 இலங்கையர்களை பிரித்தானியா இலங்கைக்கு நாடுகடத்துகிறது என அறிவித்திருந்த இந்நிலையில் குறித்த 50 பேரும் விசாரணைகள் இன்றி சிறைகளில் அடைக்கப்படவோ, அல்லது சித்திரவதை செய்யப்படவோ இடமுள்ளதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.
இறுதிநேரத்தில் கூட நாடு கடத்தப்படுவோரின் சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர்களின் பாதுகாப்பு குறித்து ஐ.ஓ.எம் என்ற சர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தினர், எனினும் அந்த அமைப்பு, நாடு கடத்தப்படுவோரின் பாதுகாப்பு குறித்து தம்மால் உறுதிப்பாட்டை தெரிவிக்கமுடியாது என்று தெரிவித்துவிட்டது.
இந்தநிலையில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரம் நாடு கடத்தப்படுவோரிடம் தமது கொழும்பு உயர்ஸ்தானிகர தொலைபேசி இலக்கங்களை கொடுத்துள்ளது. எனினும் சித்திரவதையில் இருந்து விடுதலை அமைப்பின் தலைவர் கீத் பெஸ்ட், நாடு கடத்தப்படுவோர் தொடர்பில், பிரித்தானிய எல்லைப்பாதுகாப்பு சபையின் தலைவர்  Rob Whiteman னுடன் தொடர்பு கொண்டு, நாடு கடத்தப்படுவோரின் தொடர்பு தகவல்களை பெற்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகமும் அவர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறியவேண்டும் என்று கோரியுள்ளார்.
இதேவேளை நாடு கடத்தப்படும் தமிழர்கள் நிச்சயமாக இலங்கையில் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten