கருத்துமுரண்பாடுகள்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 25 september 2011
நயினை நாகபூசணியின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் சிங்கள மக்கள்!!!
(வீடியோ இணைப்பு)
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நாளாந்தம் அலைகடல் என மக்கள் வருகை தருவது அதிகரித்து வருகின்றது.
இதில் தென்பகுதியில் இருந்து வரும் சிங்கள மக்களின் அளவு மிக மிக அதிகமாகவே காணப்படுகின்றது. இப் பகுதியில் விகாரை இருப்பதுவே இதற்குக் காரணம் எனலாம்.
இவ்வாறு விகாரைக்கு விஜயம் செய்யும் சிங்கள மக்கள் நயினை நாகபூசணித் தாயையும் தரிசிக்கத் தவறுவதில்லை.
அவ்வாறு தரிசிக்க வரும் சிங்கள மக்கள் தாங்கள் அணிந்திருக்கும் பாதணிகளை ஆலயத்திற்குள் போட்டுக் கொண்டு செல்வதும், அல்லது ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்வதும் ஆலயத்தின் புனிதத் தன்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயற்பாடாகவே அமைகின்றது.
ஆனால் இவ்வாறு பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் மக்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என ஒரு வயதுபோன ஐயா வழமையாக கூறிக் கொண்டிருப்பார்.
இருந்தும் அவரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டுச் சிலர் பாதணிகளை ஆலய முன்றலில் கழற்றி விட்டுச் செல்கின்றனர்.
அல்லது தாங்கள் கொண்டு வரும் பைக்குள் பாதணிகளைப் வைத்துக் கொண்டு அப்படியே ஆலயத்திற்குள்ளும் செல்கின்றனர்.
அவ்வாறு கழற்றி விட்டுச் செல்லும் பாதணிகளை இந்த ஐயா தான் வைத்திருக்கும் தடியால் தட்டி விடுவதும் வழமை. இவ்வாறு நாளாந்தம் நடைபெறுவது வழமையாகி விட்ட ஒன்று.
இருந்தும் முழுக்க முழுக்க நாம் சிங்கள மக்கள் மீது குறைகூறுவது தவறான விடயம். ஏனென்றால் இந்து ஆலயங்களின் நடைமுறைகள் சிங்கள மக்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே அதனை நாம் அவர்களுக்குத் தெரிந்த மொழியில் விளங்கப்படுத்திப் பதாகைகளைத் தொங்க விடுவது கட்டாய தேவையாகும். இதனை ஆலய பரிபாலன சபை முதன்மைப்படுத்தி செய்ய வேண்டிய ஒன்றாகும்.
24 Sep 2011
Geen opmerkingen:
Een reactie posten
Nieuwere post
Oudere post
Homepage
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten