சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சிங்கள-முஸ்லிம் இனத்தவர்களுக்கு இடையில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை மாவட்டத்தில் உள்ள டிக்வெல்ல என்ற இடத்தில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மோதல் சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நட்புறவு துடுப்பாட்டப் போட்டி ஒன்றை அடுத்தே ஆரம்பமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகளும், வழிபாட்டு இடம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
சிங்களவர்கள் சிலர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அந்த தகவல் மேலும் கூறியுள்ளது.
இந்த மோதலைக் கட்டுப்படுத்த சிறிலங்கா காவல்துறை தவறிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அதிரடிப்படையை அனுப்பி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten