தமிழீழ தேசிய தலைவரது இளைய மகன் பால்ச்சந்திரன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட காட்சிகளைப் பார்வையுற்ற, தமிழக மாணவர்கள் வெகுண்டு எழுந்து போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அவர்களின் உணர்வலைகள் தமிழகம் எங்கும் எதிரொலிக்கும் இவ்வேளையில், அனைத்து பல்கலைக் கழகங்களையும் மூடி விடுதிகளையும் மூடிவிடுமாறு மத்திய அரசு,செல்வி ஜயலலிதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளது என நியூ டெல்லி TV தகவல் வெளியிட்டுள்ளது. இருப்பினும் வரும் 20ம் திகதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்தபடி நடக்கும் என்று மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளார்கள்.
மாணவர்களின் எழுச்சி பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ள இந் நேரத்தில், சில அரசியல் கட்சிகள் அமெரிக்க பிரேரணையை எரித்தும் வருகிறார்கள். இவை தமிழர்கள் மத்தியில் சில குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
Geen opmerkingen:
Een reactie posten