சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி செல்ல ஆயத்தமான 45 பேர் வரை இன்று அதிகாலை சிலாபம், மாரவில்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் பஸ் மற்றும் வானில் நேற்றிரவு மாரவில்ல, குடாமடுவெல்ல கடற்பகுதிக்கு சென்றுள்ளனர்.
மாரவில்ல கரையோரத்தில் படகில் ஏறுவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 34 ஆண்களும், 5 பெண்களும், 6 சிறார்களும் இருந்துள்ளனர்.
குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் அம்பாறை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten