இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல் புதுச்சேரியிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
அவர்களை வலுக்கட்டாயமாக பொலிசார் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல்துறையின் இது போன்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Geen opmerkingen:
Een reactie posten