ஐ.மு.கூட்டணியில் இருந்தும், மத்திய அரசிலிருந்தும் திமுக உடனடியாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை பெருமளவு நீர்த்துப்போக விட்டதோடு, திமுக முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு ஒரு சிறிதும் பரிசீலனை செய்யவில்லை.
எனவே ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத, சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், திமுக மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படுகிறது என்றார்.
ஈழத் தமிழர் போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாக கருணாநிதி தெரிவித்தார்.
ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
ஈழத்தமிழர் உரிமை, தமிழர்கள் வாழ்வாதரத்திற்காக, 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக குரல் கொடுத்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியது என்று தி முக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது கட்சியின் விலகல் கடிதத்தை இன்று உத்தியோகபூர்வமாக அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈழப் பிரச்சினையில் மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி காரணம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கூடவே இருந்து குழிபறிக்கும் வேலையை செய்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
வெளியிலிருந்தும் ஆதரவு கிடையாது என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக அமைச்சர்கள் அனைவரும் இன்று அல்லது நாளை பதவி விலகுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தி.மு.கவின் ஐந்து அமைச்சர்கள் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் டெசோ தொடர்ந்து ஈடுபடும் என்றும், தமது தலைமையிலான டெசோ குழு ராஜபக்சவை சந்தித்து பேசும் திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மம்தா பெனார்ஜி தலைமையிலான திரிணாமூல் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி இருந்தது. திரிணாமூல் கட்சியில் 4 அமைச்சர்கள் இருந்தனர்.
ஐ.மு.கூட்டணியில் இருந்து திமு.க விலகல்: பிராணாப் முகர்ஜியிடம் கடிதம் கையளிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 06:11.04 PM GMT ]
இரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்தில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் மத்திய அமைச்சர்கள் அவரிடம் தங்களின் ராஜினாமா கடிதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் 2004-ம் ஆண்டு முதல் தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இடம் பெற்றனர்.
2009-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது மீண்டும் தி.மு.க. மந்திரிகள் இடம் பெற்றனர்.
பல்வேறு பிரச்சினைகளில் தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதற்காக கூட்டணியில் இருந்து விலகப் போவதாக தி.மு.க. மிரட்டல் விடுத்து பின்னர் சமாதானம் ஆகியது.
இந்த முறை இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் கடுமையான வாசகங்களுடன் கூடிய திருத்தம் செய்ய இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்தார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் பேச்சு நடத்தினார்கள்.
ஆனால் மத்திய அரசு எந்த உறுதியும் அளிக்காததால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. இதற்கான அறிவிப்பை இன்று காலை தி.மு.க. தலைவர் கருணாநிதி சென்னையில் வெளியிட்டார்.
திமுக விலகியதால் மத்திய அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை: ப.சிதம்பரம்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 12:20.40 PM GMT ]
இது தொடர்பாக அவர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. தமிழக கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து அரசு தேவையான முடிவுகளை மேற்கொள்ளும்.
நெருக்கடியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றார்.
மேலும் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆலோசனை நடந்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளரிடம் பேசிய ப.சிதம்பரம் தெரிவித்தார்.
அமெரிக்க தீர்மானத்தை பலப்படுத்துவது பற்றி ஆராயப்பட்டு வருகிறது என்றும், இலங்கை பற்றிய தீர்மானம் தொடர்பாக தமிழக கட்சிகளுடன் அரசு ஆலோசிக்கும் என்றும், திமுக தலைவர் கருணாநிதி, தீர்மானத்துக்கு 2 திருத்தங்களை முன்மொழிந்துள்ளார், அந்த திருத்தம் குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
Geen opmerkingen:
Een reactie posten