தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

எழுச்சி பெற்றது தமிழகம் சட்டத்தரணிகளும் இணைந்து போராட்டம்!


சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை பேரவையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காரைக்குடியில், சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரமணன் தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பஞ்சு, வக்கீல்கள் முருகானந்தம், இளங்கோ, பிரகாஷ், கமல் தயாளன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
காரைக்குடி அரசு கலைக் கல்லூரி முன்பு மாணவர்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்துள்ளது.
இதேவேளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர்களும் சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
ஜெகநாதன் தலைமையில் சுமார் 50 மாணவர்கள் பல்கலைக்கழக வாசலில் உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளனர்.
யார் தொடங்குவது என்ற தயக்கத்தில் இருந்ததைப் போல, லயோலா மாணவர்கள் போராடத் தொடங்​கியதும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக இன்று சட்டத்தரணிகள் சங்கதினரும் இணைந்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten