இலங்கைத் தீவில் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், சிறீலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டு தலைவர்களின் கூட்டத்தை கனடா புறக்கணிக்கும் என்ற தொனியில் தொடர்ச்சியான அறிக்கைகளை விடுத்து வந்தார் கனடா பிரதமர்ஆயினும், தற்போது குறித்த நிகழ்வுகளில் தனது நாட்டின் சர்பாக பங்குபற்றுவதற்கு விசேட பிரதிநிதியை அனுப்புகிறார்.
இது சிறீலங்காவுக்கு எதிராக போராட்டம் நடாத்தி வரும் சுமார் நான்கு இலட்சம் பேரை கொண்ட தமிழ் சமூகத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் செயல் புலம்பெயர் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜெனிவாவில் சிங்களவர்கள் நடாத்த விருந்த போராட்டத்துக்கு சுவி ஸ் அரசாங்கம் எச்சரிக்கும் தொனியில் அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
கோட்டே மேயரினால் சுவிட்சர்லாந்தில் நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டே மேயர் ஜனக ரணவக்கவினால் ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு எதிரில் போராட்டம் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.
சிறீலங்காவுக்கு எதிரான அழுத்தங்களை கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்படவிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. எனினும் இந்த போராட்டத்திற்கு சுவிட்சர்லாந்து அதிகாரிகள் அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலி வழியாக கோட்டே மேயர் சுவிட்சர்லாந்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது, சுவிட்சர்லாந்து அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்காது மீளவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பி வைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இம்மாதம் 4ம் திகதி சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஜெனிவாவில் நடாத்திய போராட்டத்துக்கு அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten