'யாழ் நகரத்தை சுடுகாடாக்கிய மாநகரசபையினர்' என விந்தன் தெரிவித்த கருத்துக்கு யாழ் மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா காட்டமான பதிலடி கொடுத்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யாழ்.மாநகரசபையினை சிங்கப்பூராக மாற்றியமைப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த மாநகர முதல்வர் உள்ளிட்ட அரச தரப்பினர், சோலை வரி, வாடகை போன்றவற்றை அதிகரித்து மக்களை ஏதிலிகளாக்கியதோடு, நகரத்தை சுடுகாடாக மாற்றியிருக்கின்றார்கள் என யாழ். மாநகரசபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவித்ததை அடுத்து, மாநகரசபை முதல்வர் பதில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் தெரிவித்துள்ளமை யாதெனில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் என்று தன்னை கௌரவமாக அழைத்து கொள்ளும் மாநகர சபை உறுப்பினர் விந்தன் மாநகரத்தின் அபிவிருத்தியை சகிக்க முடியாத நிலைமையில் செய்திகளை வெளியிடுவது மிகக் கவலைக்கிடமாக உள்ளது.
ஏனெனில் நேற்றைய தினம் 'செம்மணி வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்கு மாநகர சபை பொறுப்பேற்க வேண்டும்'' என்றும் கூறுவது வேடிக்கையான செயலாகும்.
ஏனெனில் நேற்றைய தினம் 'செம்மணி வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்கு மாநகர சபை பொறுப்பேற்க வேண்டும்'' என்றும் கூறுவது வேடிக்கையான செயலாகும்.
மாநகர சபையின் எல்லை எது என்று தெரியமால் 'யாழ் நகரத்தை சுடுகாடாக மாற்றியுள்ள மாநகர சபை'' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாநகர சபையை குற்றம் சாட்டியமை தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.
செம்மணி வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைப்பற்றியுள்ள நல்லுர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி என்று தெரியாமல் மக்கள் பிரதிநிதியாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
செம்மணி வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைப்பற்றியுள்ள நல்லுர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி என்று தெரியாமல் மக்கள் பிரதிநிதியாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவர் உண்மையில் யாழ் மாநகர சபை எல்லையை பிறப்பிடமாக கொண்டவராக இருந்திருந்தால் இவ்வாறு கூறியிருக்கமாட்டார். தன் குற்றத்தை மறுப்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாகும். மக்கள் மத்தியில் செய்து வரும் அபிவிருத்தியை கொச்சை படுத்தியமை தமிழ் மக்களின் மனதை வருத்திய செயல் ஆகும்.
தான் அங்கம் வகிக்கும் மாநகர சபையின் எல்லையையே தெரியமால் பேசும் இவர் தமிழ் மக்களின் பிரச்சினையையா? தீர்க்கப்போகின்றார் என்பது எமது உறவுகள் சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும்.
எனவே இவர் பதவி துறந்து வீதியில் திரிவது தான் மக்கள் கொடுக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும். எங்கு தவறு நடந்தாலும் அமைச்சர்களையும் எம்மையும் குறை கூறுவது இவருடைய வாடிக்கையான விடயமாகும்.
இதே வேளை அந்த இளம் குழந்தைகளின் இழப்பு மிகவும் மனம் வருந்தக் கூடியதாகும். அந்த குழந்தைகளை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை யாழ் மாநகர சபை ஆளும் கட்சி சார்பாகவும், எமது கட்சி சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எனவே இழப்பில் அரசியல் இலாபம் தேடும் விந்தனின் செயற்பாடு கண்டிக்கதக்க விடயமாகும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இழப்பில் அரசியல் இலாபம் தேடும் விந்தனின் செயற்பாடு கண்டிக்கதக்க விடயமாகும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten