தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

வன்னிப் பாடசாலைகளுக்குள்ளே அத்துமீறி உள்நுழையும் இராணுவம்: அதிர்ச்சியில் மாணவர்கள்


வன்னியிலுள்ள சில பாட்சாலைகளில் பலவந்தமாக நுழையும் இராணுவத்தினர் பாடசாலை மாணவர்களின் விபரங்களைப் பதிவு செய்வதோடு, புகைப்படங்களும் எடுத்து வருவதால் மாணவர்களும் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். 
இச்செயலை கடந்த மூன்று நாட்களாக சீருடையில் இருக்கும் இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிபர்களிடம் மாணவர்களின் விபரங்களை சேகரிக்கப் போவதாக கூறி தொடர்ந்து பாடசாலையின் உள்ளே செல்லும் இராணுவத்தினரது இச்செயற்பாடுகளால் அதிபர்களும் ஆசிரியர்களும் பீதியடைந்துள்ளனர்.
ஏன்? எதற்கு இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொள்கின்றனர் என அறியாத பெற்றொரும் மாணவர்களும் அச்சமடைந்த நிலையில் செய்வதறியாத நிலையில் உள்ளனர்.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்கள் சிலர் பாடசாலைகளுக்கு செல்லாமல் உள்ளதாகவும் வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten