குறித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி சேவையில் ஈடுபட்ட போது பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
புலனாய்வுப் பிரிவிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பிரபல அமைச்சர் ஒருவரின் உதவியுடன் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் இணைந்து கொண்டுள்ளார்.
ஊழல் மோசடி கப்பம் கோரல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் குறித்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஆறு மாதங்களுக்கு முன்னர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கொம்பனித் தெருவில் இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு பேர் தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதான சந்தேக நபருக்கு மேலதிகமாக மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளரும் இந்தக் கொள்ளையுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten