தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் !


தமிழர் தாயகத்தில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்களைக் கொன்றொழித்த சிறிலங்கா அரசின் எந்தவொரு உள்ளக விசாரணையிலும்; தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. அமெரிக்காவால் கொண்டுவரப்படும் தீர்மானம் இனப் படுகொலைக்கு முகம் கொடுக்கு, எம் மக்களுக்கு எவ்வித பலனையும் கொண்டுவரப் போவதில்லை பரிந்துரைகள் தமிழ்மக்களுக்கான நீதியை ஒருநாளும் பெற்றுத்தரப்போவதில்லை. ,தனை முன் வைத்துக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் எவ்வித பலனையும் தமிழ் மக்களுக்கு கொண்டுவரப் போவதுமில்லை.

உற்றார் உறவுகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும்; ஈழத்தமிழினம் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஒரு நியாயமான தீர்வையே எதிர்பார்த்து நிற்கின்றது. நீதியை நிலை நாட்டும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றே அதனைப் பெற்றுத் தரும் என தமிழ் மக்கள் நம்புகின்றார்கள்.சர்வதேச சுயாதீன விசாரணைக்கான பொறிமுறை ஒன்றைப் பரிந்துரைக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஈழத்தில் வாழும் தமிழ்மக்கள்; சார்பில் பிரித்தானியா வாழ் தமிழர்களால்; மாபெரும் ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இவ்வொன்று கூடல் மார்ச் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை,

U.S. Embassy, London
24 Grosvenor Square
London W1A 2LQe

Bond Street என்னும் இடத்தில் நடைபெறவிருக்கின்றது. தமிழ்மக்கள் அனைவரையும் தவறாது இணைந்து கொண்டு எம்மக்களுக்காகக் குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகட்கு :
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு
தமிழ் இளையோர் அமைப்பு


Geen opmerkingen:

Een reactie posten