தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

தமிழினத்தை அழித்த ராஜபக்சவையும் அவரது சகோதரரையும் கைது செய்ய வேண்டும்: வேல்முருகன்


தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சவையும் அவரது சகோதரரையும் கைது செய்ய வேண்டும், சர்வதேச விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள், தமிழ் உணர்வாளர்கள் முற்றுகையிட்டனர்.
போராட்டத்தின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.
பொது வாக்கெடுப்பு நடத்தி தனி தமிழ் ஈழம் அமைக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தில் தமிழ் இனம் நிம்மதியாக வாழ முடியும். இதனை இந்திய அரசு செய்ய நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten