தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 april 2014

லண்டனில் நேற்றைய தினம் 35 க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து நடாத்திய உலகத் தமிழர் இணைய மாநாடு !


லண்டனில் 35க்கும் மேற்பட்ட இணையங்கள் இணைந்து, உலகத் தமிழர் இணைய மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார்கள். குறிப்பாக ஈழத்து செய்திகளை முன் நிலைப்படுத்தி வெளியிடும் தமிழ் ஊடகங்கள் பல இதில் கலந்துகொண்டுள்ளது. மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான இந்த மாநாட்டில் பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. தமிழ் இணையத்தின் எதிர்காலம், செய்திகளின் நம்பகத்தன்மை, இணைந்து செயல்படுதல் போன்ற விடையங்கள் பூட்டிய அறைக்குள் விவாதிக்கப்பட்டது. இதனூடாக சில தீர்மானங்களும் எட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். பல இணையங்கள் தாம் இணைந்து செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் என , இம் மாநாட்டை ஒழுங்குசெய்துள்ள உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பல தமிழ் இணையங்களை ஒன்றிணைத்துள்ள, "உலகத் தமிழ் ஊடகவியலாளர் அமைப்பு" நேற்றைய தினம் உருவாக்கப்பட்டுள்ளது. மாலை 7.00 மணிக்கு வெம்பிளி உதனைபந்தாட்ட மைதானத்திற்கு அருகாமையில்(வெம்பிளி ஸ்டேடியம்) உள்ள பாரிய மண்டபத்தில் ஒன்று கூடல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. முதல் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் , பின்னர் இந்த பாரிய மண்டபத்தில் பலரோடு இணைந்து ஒன்று கூடல் நிகழ்விலும் கலந்துகொண்டார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இதில் கலந்துகொண்டது பெரும் வெற்றி என "உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பிரித்தானிய எம்.பீக்கள் , தொழில் கட்சிக்கான தமிழர் அமைப்பு, கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பு, கவுன்சிலர்கள், கலைஞர்கள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர், கணனி வல்லுனர்கள், மற்றும் செயல்பாட்டாளர்கள் என பல துறை சார் மக்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள். 




































http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6632

Geen opmerkingen:

Een reactie posten