அதனால் "தான்" அரசியலில் அதிமேதாவி என்றும் ஈழத்தில் இருந்து ஜெனிவா சென்ற ஈழத் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒரு "கோமாளிகள்" என்றும் இவர் பகிரங்கமாக வர்ணித்துள்ளார். இதனை முன்னணி இணையம் (தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவான) கட்டுரையாக வெளியிட்டுள்ளது. இவர் குறிப்பிடும் நபர்களில் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் அடங்குகிறார். கஜன் குறித்து நாம் விளக்கம் சொல்லத்தேவையில்லை, அவர் அரசியல் பின்னணி என்ன ? அவர் எப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், அவர் தந்தை யார் என்பது பற்றி தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் சொல்லிப் புரியத்தேவையில்லை. ஜெனிவா சென்று அடிக்கடி படம் காட்டும் கிருபா , ஈழத்து உணர்வாளர்களையும் அரசியல்வாதிகளையும் படு கேவலமான முறையில், வர்ணித்துள்ளார்.
"கடந்தகாலத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள்" என்று கிருபா கூறியுள்ள விடையத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தேர்தலில் தோற்பதும், ஜெயிப்பதும் சர்வசாதாரணம். யார் தான் தோற்கவில்லை ? இதனை எல்லாம் சுட்டிக்காட்டி தனது கட்டுரையை இவர் ஏன் எழுதவேண்டும். தமிழ் தேசிய உணர்வாளர்கள் பேசியதால் தான் 2 நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வோட்டுப் போடவில்லை என்று சொல்லும் கிருபா, அந்த நாடுகளின் பெயரை ஏன் குறிப்பிட அஞ்சுகிறார் ? அத்தோடு அடிக்கடி ஜெனிவா சென்று பேசும் கிருபாவால், அந்த 2 நாடுகளையும் மாற்ற முடியவில்லையா ? அப்படி என்றால் அடிக்கடி ஜெனிவா சென்று நீங்கள் என்ன பிலிம் காட்டுகிறீர்களா ? புகைப்படங்களை எடுத்துவிட்டு, அங்கிருந்து தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்களுக்கு அனுப்பிவிட்டு, நான் ஜெனிவாவில் இருக்கிறேன் என்று பிலிம் காட்டுவதே இவர் வாடிக்கையாகிவிட்டது. இதுவரை நீங்கள் எதனை சாதித்து இருக்கிறீகள் ? என்று சற்று கூற முடியுமா ?
ஒரு சில இணையங்களை வளைத்து கைகளில் போட்டுக்கொண்டு, இவர் ஆடும் நாடகம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. ஜெனிவாவுக்கு யார் வேண்டும் என்றாலும் செல்லலாம். மனித உரிமை ஆர்வலர் என்று சொல்லி, முறையாக முன்பதிவை மேற்கொண்டால், இல்லை என்றால் ஊடகவியலாளர் என்ற முன் பதிவை மேற்கொண்டு எவரும் செல்லலாம். ஆனால் அங்கு வரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் பேசவேண்டும். அதற்கு ஆங்கிலப் புலமை வேண்டும். அவர்களை ஈழப் போராட்டம் சார்பாக இழுக்கவேண்டும். அதுவே எமது வெற்றிக்கு வழிகோலும். ஆங்கில இனத்தவரை மணந்ததால், அவர் எழுதி தரும் விடையங்களை அப்படியே ஈ-அடிச்சான் காப்பியாக வாசித்துகாட்டிவிட்டு, நான் ஜெனிவா சென்றேன் என்று பிலிம் காட்டும் சிலர் உள்ளார்கள். தமிழர்களின் தேவைகளை அறிந்து உண்மையான மனத்தோடு, எம் இனத்திற்காக போராடுங்கள்.
அதனை விடுத்து, தனக்கு பிடிக்காத ஆட்களை தாக்கவும், அவர்கள் மேல் பழிபோடவும் 25 நாடு வாக்களிக்க இருந்தது ஆனால் 23 நாடு தான் வாக்குபோட்டது என்று சொல்லி பிலிம் காட்டவேண்டும் ! அமெரிக்க தீர்மானத்தை ஒட்டுமொத்த தமிழினமே ஒதுக்கிவிட்டது. முன்னர் இந்தியா இல்லாமல் தீர்வில்லை என்று அலட்டி திரிந்த கிருபா, இன்று அமெரிக்கா இல்லாமல் தீர்வில்லை என்று சொல்லித்திரிகிறார். உண்மையான அரசியல் கோமாளி யார் என்பது இப்போது மக்களுக்கு நன்றாக விளங்கி இருக்கும் ! என நாம் எண்ணுகிறோம். அரசியல் காழ்புணர்வுகளை வைத்துக்கொண்டு தேசியம் பேசவேண்டாம். மற்றவர்களையும் மதிக்க கற்றுகொள்வதே ஒரு நல்ல அரசியலுக்கு அழகு ஆகும்.
நன்றி சம்பவம் இணையம்
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6658
Geen opmerkingen:
Een reactie posten