தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 19 maart 2013

மஹிந்த ராஜபக்சவை யுத்தக்குற்றவாளி என்று அறிவிக்கவேண்டும என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது!– பாஜக !


இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை யுத்த குற்றவாளி என்றும் அறிவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. அதன் பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார். 
செய்தியாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பும் சமஉரிமையும் வழங்பப்பட வேண்டும்.
அத்துடன் தொடர்ந்தும் வன்முறைகள் இடம்பெற இடமளிக்க கூடாது என்பதுடன், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சரியான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.
எனினும் மகிந்த ராஜபக்சவை யுத்தக்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கையை பி.ஜே.பி ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten