கொடிகாமம் தவசிகுளம் கண்ணகி அம்மன் ஆலய அன்னதான மடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு, உரையாற்றும்போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சைவமும் தமிழும் எமது இனத்தினுடைய முக்கிய அடையாளமாகவும் ஆதாரமாகவும் விளங்குகின்றது. எமது இன அடையாளங்களை அழித்து எமது மக்களின் சிந்தனைகளை திசை திருப்புவதனூடாகவும் எம்மை நாமே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான செயற்பாடுகளும் பல நடைபெறுகின்றன.
மதம் என்பது மக்களுடைய மனங்களை தூய்மைப்படுத்தி நல் ஒழுக்கமுடைய நல்ல மனிதர்களாக வாழ வைப்பதற்கே தோற்றுவிக்கப்பட்டது. இப்போது மதத்தை வைத்தே தமிழ் பேசும் மக்களை அடக்கி அடிமைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இந்த நாட்டில் நடைபெற்று வருகின்றன.
தழிழ் மக்களுடைய மத உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆலயங்களினூடாக எமது இனத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களும் ஒழுக்க நெறிகளும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதனைக்கூட எம்மவர்களில் பலர் மறந்தவர்களாக மாறிவருகின்றார்கள்.
இன்றைக்கு எமது இனத்தினுடைய அவல நிலைகளுக்கு எம்மை நாமே இழந்துள்ளமைதான் காரணம். காணாமல்ப் போன எமது உறவுகளைத் தேடி கண்ணீரோடு அலைபவர்களாகவும், அடக்குமுறைகளுக்குள் அகப்பட்டு சுயமாக சிந்திக்க, செயற்பட வழியற்று ஒருவிதமான அச்சத்தோடு ஒரு புறத்தில் அடக்கப்பட்டுக் கொண்டும்.
இன்னொரு புறத்தில் எமது பண்பாட்டையும் கலாச்சாரங்களையும் மறந்து எம்மை நாமே அழித்துக்கொள்வதற்குத் துணை நிற்கின்றோம். இவற்றிலிருந்து விடுபட்டு நாமும் உணர்வோடும் உரிமைகளோடும் ஒழுக்கத்தோடும் வாழவேண்டும் என்றார்.
தவசிகுளம் கண்ணகி அம்மன் ஆலய அன்னதான மடத் திறப்பு விழா, ஆலய பரிபாலன சபைத் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக மணவனுமான ஜெயராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை தலைவரும் ஆலய அறங்காவலர்சபை தலைவருமான அசோகலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களான தங்கராசா, இரத்தனசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Geen opmerkingen:
Een reactie posten