இரத்த அழுத்தத்தாலும் ஏனைய நெருக்கடிகளாலும் மனச்சோர்வடைந்துள்ள மகிந்தர் அண்மையில் ஓடியவிமானத்தில் துள்ளிக்குதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது,
மகிந்த ராஜபக்ஷ தனது இரண்டு கைகளிலும் கைக்கடிகாரங்கள் அணிந்து கொண்டது தகவல்கள் கசிந்துள்ளது.
அம்பந்தோட்டை சூரியவெவ மகிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்ட அன்றே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இம் மைதானத்தின் முதலாவது போட்டிஇ இலங்கைஇ கனடா அணிகளுக்கிடையே நடைபெற்றது.
இப்போட்டியைப் பார்க்க தன்னுடன் வருமாறு உபாலி தர்மதாசவுக்கு மகிந்தர் அழைப்பு விடுத்திருந்தார்.
விமானப் படைக்குச் சொந்தமான உலங்கு வானூர்தியில் இருவரும் அருகருகே அமர்ந்து பயணம் செய்தவேளையில் உபாலி தர்மதாசவின் கைக்கடிகாரத்தைக் கண்ட மகிந்தர் ஆசையுடன், ‘உபாலி நல்ல அழகான கைக்கடிகாரம் அணிந்துள்ளீர்கள். அதிக விலையாய் இருக்கும் போல’ என அதைப் பெற்றுக் கொள்ளும் ஆசையுடன் வினவியுள்ளார்.
உடனடியாகச் செயல்பட்ட உபாலி தர்மதாச சுமார் 25,000 டொலர் பெறுமதியான அந்தக் கைக்கடிகாரத்தை தனது கையிலிருந்து கழற்றி எடுத்து ஜனாதிபதியின் வலது கையில் அணிவித்துள்ளார்.
பெற்றோரிடமிருந்து பரிசு பெற்ற குழந்தைபோல குதூகளிப்பில் ஆழ்ந்த மகிந்தர் தனது இடது கையில் அணிந்திருந்த ரொலெக்ஸ் கைக்கடிகாரத்தையும் வலது கையில் இருந்த உபாலி தர்மதாசவின் 25,000 டொலர் பெறுமதியான கைக்கடிகாரத்தையும் உலங்கு வானூர்தியில் இருந்த அனைவருக்கும் தனது இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டி சந்தோஷப்பட்டுள்ளார்.
வானில் பறக்கும் சமயம் உபாலி தர்மதாச ஜனாதிபதிக்கு வழங்கிய 25,000 டொலர் பெறுமதியான கைக்கடிகாரத்திற்காகவே தொடர்ந்து வந்த நாட்களில் இடைக்கால கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் பதவிக்காக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இம்முறையும் கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் பதவிக்கு உபாலியிடம் ஜனாதிபதியே யோசனை கூறியுள்ளார்.
எனினும், போட்டியிடுமாறு யோசனை கூறிய மகிந்தர் விளையாட்டு அமைச்சரின் ஊடாக உபாலி தர்மதாசவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten