தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 12 maart 2013

நான் அவன் இல்லை: பாலியல் குற்றவாளி!


இந்தியாவில் ராஜஸ்தானில் வைத்து ஜெர்மனி பெண்ணொருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த ஒருவர் 6 வருடங்களின் பின்னர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.ஒரிசாவின் முன்னாள் டிஜிபி மொந்தியின் மகன் பிட்டி மொஹந்தி என்படும் இவர் கேரளாவில் வைத்தே கைதாகியுள்ளார்.முதலில் தான் தான் பிட்டி என்று ஒப்புக்கொண்ட அவர் தற்போது தனது பெயர் ராஜீவ் ரஞ்சன் என்று சாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒரிசா முன்னாள் டிஜிபி பிபி மொஹந்தியின் மகன் பிட்டி மொஹந்தி. அவர் கடந்த 2006ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 26 வயது ஜெர்மனி பெண்ணை ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் வைத்து பலாத்காரம் செய்தார்.

இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிட்டி உடல் நலம் சரியில்லாத தனது தாயை பார்க்க பரோலில் அதே ஆண்டில் வெளியே வந்தார்.பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டார். பொலிசார் அவரை 7 ஆண்டுகாலமாக தேடி வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அவர் கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார்.கேரள பொலிசார் பிட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தன் பெயர் பிட்டி மொஹந்தி என்பதை முதலில் ஒப்புக் கொண்டார். ஆனால் தற்போது தான் ராஜீவ் ரஞ்சன் என்று சாதித்து வருகிறார்.

இதற்கிடையே ராஜஸ்தான் பொலிசார் பிட்டியை அடையாளம் காண இன்று கேரளா செல்கின்றனர். இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் லால்கோத்தி காவல் நிலைய பொலிஸ் அதிகாரி சம்பத் சிங் கூறுகையில், நாங்கள் கேரளாவை அடைந்தவுடன் அவரின் அடையாளத்தை கண்டுபிடிப்போம் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten