இலங்கைக்கு வருவதற்கான ஆசை மனதுக்குள் இருக்கின்றது. ஆனாலும் நான் வந்தால் எனது கொடும்பாவியை எரிப்பார்களே. இவ்வாறு இலங்கை தொடர்பில் ஐ.நா. செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவர் மர்சூகி தருஸ்மன் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஓரங்க நிகழ்வுகளில் கலந்துகொள்ள வந்திருந்த அவருடன் உதயன் செய்தியாளர் உரையாடியபோதே மேற்படி கருத்தை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்தீர்கள். அது இப்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறதே'' என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அறிக்கை சமர்ப்பிப்பது மட்டுமே எமது பணி. மிகுதி வேலைகளைச் செய்ய வேண்டியது ஐ.நாவின் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
சரி.. உங்களின் அறிக்கை சரியானதுதான் என்பதில் உங்களுக்குத் திருப்தி உள்ளதா'' என்று கேட்டபோது "நிச்சயமாக.. எனது கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன் என்ற நம்புகிறேன்.
நாங்கள் இல்லாத எதையும் குறிப்பிடவில்லை. நடந்தவற்றை தீவிரமாக ஆராய்ந்து எமது அறிக்கையை சமர்ப்பித்தோம்'' என்றார் தருஸ்மன்.
"இலங்கைக்கு வந்து நிலைமைகளைப் பார்த்து அறிக்கைகளை சமர்ப்பிக்கலாமே'' என்ற கேள்விக்கு சத்தமாக சிரித்தவாறு பதிலளித்த அவர், "ஆசையாகத்தான் உள்ளது... இப்போது வந்தால் கொடும்பாவிகளை எரிப்பார்களே'' என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten