இலங்கை தமிழர்களுக்கு நலனுக்கு ஆதரவாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் 2வது நாளாக இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசு கலை கல்லூரி மாணவர்களை நேரில் சென்று, அந்த மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பழ.நெடுமாறன் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கை விவகாரத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடலூர் அரசு கல்லூரி மாணவர்களை பாராட்டுகிறேன்.இந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது.
தேர்வு நடைபெறும் காலத்திலும் தமிழ் ஈழத்தை மீட்பதே தங்களுடைய நோக்கமாக கொண்டு உறுதியுடன் போராடுகிறார்கள். பல லட்சம் இலங்கை தமிழர்களை கொன்ற ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக்கி சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
அதே வேளையில் தமிழ் ஈழ மக்களின் விருப்பம் என்ன? என அறிந்து கொள்ள ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகவும் தமிழகத்தில் மாணவர்கள் போராடி வருகிறார்கள்.
இந்த போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. மாணவர்களுடன் பொதுமக்களும் சேர்ந்தால் தமிழகத்தில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் போக்கு தொடருமானால் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒருங்கிணைந்து அடுத்த கட்ட போராட்டம் அறிவிக்க உள்ளனர். அவ்வாறு அறிவித்தால் அந்த போராட்டத்துக்கு அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten