தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

சென்னையில் மன்மோகன்சிங், மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கொடும்பாவி எரி்த்து போராட்டம்!


பிரதமர் மன்மோகன் சி்ங், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கொடும்பாவிகளை எரித்து மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட 4 இயக்கத்தினர் சென்னை அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வலுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவர்கள் பல்வேறு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையி்ல் மக்கள் கலை இலக்கியம் கழகம், புரட்சிக்கர மாணவர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடினர்.
அப்போது, இலங்கைக்கு எதிரான கோஷமிட்ட அவர்கள், திடீரென பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் திருவள்ளூரில் ரயில் மறியல் செய்து கைதானார்கள்.
தி்ண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அகதிகள் முகாமி்ல் 100க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten