வடக்கு கிழக்கு தமிழர்களின் வாழ் உரிமைக்காக தமிழகத்தில் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அதேநேரம் 1970ம் ஆண்டுகளில் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டு கர்நாடக மாநிலத்தில் குடியேற்றப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சாதி சான்றிதழ்களையும், அரசாங்க உதவிகளையும் கோரி உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தின் சுல்லியா டக்குர் மற்றும் புத்தூர் பகுதிகளில் உள்ள றப்பர் தோட்டங்களில் பணியாளர்களாக குடியேற்றப்பட்ட அவர்களின் 970 குடும்பங்கள் வரையில் அங்கு தொடர்ந்தும் வசிக்கின்றனர்.
அவர்கள் இலங்கையில் இருந்து சென்ற நிலையில் அவர்களுக்கான சாதி மற்றும் இன சான்றிதழ்கள் வழங்க தொடர்ந்தும் மறுக்கப்படுகிறது.
இதனால் தங்களால் அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றன.
இந்த தமிழர்களில் பல பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டால் மாத்திரமே, அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும் என்பது சுடடிக்காட்டப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten