அமெரிக்கா, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவும் நிகழ்ச்சி திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
குறித்த திட்டத்தின் ஊடாக இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உதவும் நோக்கில் இந்த வருடத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மூலமாக 1.7 மில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது.
கடத்தல்கள் உட்பட பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை தடுத்தல், சிறுவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகலை தடுத்தல், பாடசாலைகளுக்கு வெளியில் உள்ள சிறுவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாடு, மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த விடயங்கள் உள்ளிட்டவற்றுக்காக இந்த உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளது.
அதேவேளை வெளிநாடுகளில் ஆவணங்கள் எதுவுமின்றி வாழும் இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்கும் 2009 திருத்தச் சட்டத்திற்கு அமைய அகதிகளுக்கு இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் அமெரிக்கா இந்த உதவியை வழங்கவுள்ளது.
இலங்கையில் போர் முடிவடைந்துள்ள போதிலும் இந்தியாவில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றன்மை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyETXLWgv2.html
Geen opmerkingen:
Een reactie posten