தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 3 april 2014

பிரித்தானிய பிரஜை கொலை வழக்கின் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிப்பு -this is srilankan justice!!

பிரித்தானியப் பிரஜை குராம் ஷேய்க் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
இதனடிப்படையில் குறித்த கொலை சம்பவம் தொடர்பில் தங்காலை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திரபுஷ்ப விதான பத்திரன மாத்திரமே தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்தது. கொலை செய்யப்பட்ட குராம் ஷேய்க்கின் காதலியான ரஷ்ய பெண் இதன் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக குறித்த சுற்றுலா விடுதியின் முன்னாள் முகாமையாளரிடம் இன்று சாட்சியம் பெறப்படவிருந்தது. எனினும் சுகவீனம் காரணமாக தன்னால் சாட்சியமளிக்க முடியாது என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தர்.
நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சாட்சியமளித்து கொண்டிருந்த போது அவர் மயங்கி விழுந்தார்.
வழக்கில் முக்கிய சாட்சியாளரான அவர் இன்று சாட்சியமளிக்க முடியாத நிலையில், வழக்கை நீதிமன்றம் எதிர்வருமு் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
http://www.tamilwin.com/show-RUmsyETXLWgv7.html

Geen opmerkingen:

Een reactie posten