ஐக்கிய நாடுகளினால் சட்டரீதியாக நிறைவேற்றப்பட்ட யோசனைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வீண் வாதங்களினால் பிரயோசனமில்லை. அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினால் எமக்கென்ன என்று, முட்டாள்தனமான கதைகளை பேசிக் கொண்டிருக்காது அதற்கு முகம் கொடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை மீது சுமத்தப்படும் போர் குற்றங்கள் பொய்யானது என்பதை ஒப்புவிக்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஆரம்பிக்க உள்ள விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETXLWgwy.html
Geen opmerkingen:
Een reactie posten