தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிய வேண்டும்: ஜனாதிபதியின் செயலர் !

மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அரசியல் தலையீடு என கருத வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அவ்வாறான கோரிக்கைகள் தொடர்பில் முக்கியத்துவ அடிப்படையில் செயற்படுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசியலமைப்பு சபைகளின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கும் மக்களின் கோரிக்கைகளை அரசியல் தலையீடு எனக் கருதும் பழக்கத்தை அதிகாரிகள் கொண்டிருப்பதாக ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது என வீரதுங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான எண்ணப்பாடு காரணமாக அந்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை என ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது.
மக்களின் கோரிக்கைகளை அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிமையும் கடமையும், பொறுப்பும் உள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு பதில் வழங்க, அமைச்சுக்களின் செயலாளர்கள் உட்பட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர்.
இதனால் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாக லலித் வீரதுங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWeu3.html

Geen opmerkingen:

Een reactie posten