[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 02:06.18 AM GMT ]
அண்மையில் நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேர்தலில் அரசாங்கம் வெற்றியீட்டியுள்ளதாக எவரேனும் தெரிவித்தால் அது முற்று முழுதான நகைச்சுவையே. ஏனெனில் அரசாங்கத்தின் வாக்குகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
வாக்களித்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தவர்களின் மொத்த எண்ணிக்கையை கவனத்திற் கொண்டால் இந்த உண்மை வெளிப்படும்.
அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள கடுமையான எதிர்ப்பே இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது, அநேக சந்தர்ப்பங்களில் போர் வெற்றியைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தல்லகளில் வெற்றியீட்டியது.
எனினும், இந்த வெற்றிகளை ராஜபக்ச குடும்பத்தினர் மட்டுமே அனுபவித்தனர்.
தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கம் பின்னடைவை சந்திக்கும். ஏனெனில் அப்போது இருந்த மஹிந்த ராஜபக்சவை விடவும் தற்போது உள்ள மஹிந்த மீதான மக்கள் அபிமானம் வீழ்ச்சியடைந்துள்ளது என ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWew2.html
ஆசியாவின் ஆச்சரியமான இலங்கையில் மனிதாபிமானம் இல்லையாம்! துமிந்த திஸாநாயக்க
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 01:58.37 AM GMT ]
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை மாற்றமடைந்து வருகின்ற போதிலும், நாட்டின் மக்களிடையே மனிதாபிமானம் இல்லாமல் போயுள்ளது என கல்விச் சேவை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிராமப் பகுதிகளின் வீடுகள் அமைக்கப்படுகின்றன, வீதிகள் செப்பனிடப்படுகின்றன, விமான நிலையம் அமைக்கப்படுகின்றது, மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
மக்களை சமய வழிபாடுகளில் ஈடுபடச் செய்வது பௌத்த பிக்குகளின் கடமையாகும். மக்களை நல்வழிப்படுத்தும் நடவடிக்கையை வேறும் எவராலும் முடியாது.
பிள்ளைகளை அறவழியில் நடாத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியோ கல்வி அமைச்சரோ உணர்ந்து பயனில்லை, அதனை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் மத வழிபாட்டுச் சிந்தனைகளில் வீழச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு குற்றச் செயல்கள் பதிவாகின்றன.
பல பௌத்த பிக்குகள் இன்று மத சிந்தனைகள் பற்றி அறிவுரை வழங்காது, அரசியல் பேசி வருகின்றனர்.
நான் எல்லா பௌத்த பிக்குகளையும் குற்றம் சுமத்தவில்லை. எனினும், ஒரு சில பௌத்த பிக்குகள் மத வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETcLWew1.html
Geen opmerkingen:
Een reactie posten