தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 8 april 2014

லண்டனில் இரு தமிழ் பெண் வைத்தியா்கள் கடலில் பலி…

ஸ்பெயின் நாட்டு சுற்றுலா தளமான டெனெரீப் தீவில் நடந்த விபத்தொன்றில், தமிழகத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண் மருத்துவர்கள் இருவர் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவரான உமா ராமலிங்கம் ( 42) மற்றும் குடும்ப மருத்துவரான பாரதி ரவிக்குமார் ஆகிய இருவரும் டெனெரீப் தீவுகளில் தென்மேற்குப் பகுதியில் உள்ள ப்ளேயே பரைசோ என்ற இட்த்தில் ஞாயிறன்று கடலில் உயர்ந்து எழுந்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி இறந்துவிட்டனர் என்று போலிசார் கூறுகின்றனர்.

மற்றொரு பெண்ணும், 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறார்களும் மீட்கப்பட்டனர். இந்தக் குழந்தைகளை மீட்கவே இந்த இரு பெண்களும் நீரில் குதித்ததாக சில செய்திகள் கூறுகின்றன. ஆனால் விபத்து எவ்வாறு நடந்தது என்பதை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் ( இந்த மருத்துவர்கள் இருவரும் பிரிட்டிஷ் பிரஜைகள்) , ஏப்ரல் ஆறாம் தேதி விபத்தில் இறந்த்தை உறுதிப்படுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு தூதரக உதவிகள் தரப்பட்டு வருவதாக்க் கூறியது.
ஞாயிறன்று மாலை சுமார் ஆறு மணிக்கு இருவர் கடலில் தத்தளித்து கொண்டிருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்த்தாக அவசர சேவைப் பணிகள் துறைக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் கூறினார்.
உமா ராமலிங்கம் தமிழ் நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 1994ல் மருத்துவம் படித்தவர். பிரிட்டனுக்கு மருத்துவராக 2003ம் ஆண்டில் பதிவு செய்த அவர், மான்செஸ்டர் நகரில் இருக்கும் ராயல் ஓல்ட் ஹாம் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றி வந்தார். அவர்து உறவினரான, பாரதி ரவிக்குமார், லிங்கன் பகுதியில் ப்ரேஸ்பிரிட்ஜ் ஹீத் என்ற இடத்தில் குடும்ப மருத்தவராக பணியாற்றி வந்தார். இவருக்கு கணவரும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/64936.html

Geen opmerkingen:

Een reactie posten