[ வியாழக்கிழமை, 01 செப்ரெம்பர் 2011, 07:53.16 AM GMT ]
யாழ்ப்பாணம், கோண்டாவில் பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்ட மர்ம நபர், பெண்களின் மீது மோகம் கொண்ட மனநோயாளி என மருத்துவ அறிக்கை தெரிவிப்பதாக யாழ். மாவட்ட பதில் பொலிஸ்மா அதிபர் நீல் தளுவத்த தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மேற்படி நபர் தீவிர பொலிஸ் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் ஒரு மனநோயாளியென தெரியவந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.
கோண்டாவில் வடக்கு, தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த மேற்படி மர்ம நபரை மடக்கிப் பிடித்த பிரதேசவாசிகள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்த நிலையிலேயே பொலிஸார், குறித்த நபர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை. பொலிஸார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அத்துடன், அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போதும் முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.

பொலிஸாரும், இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கோண்டாவிலில் யன்னல் ஊடாக வீட்டினுள் அவதானித்த சிங்கள் இளைஞர் மீது மக்கள் நையப்படைப்பு
[ புதன்கிழமை, 31 ஓகஸ்ட் 2011, 04:27.56 PM GMT ]
கோண்டாவில் தில்லையம்பதி கிராமத்தில் வீட்டு ஜன்னல் கதவினால் வீட்டின் உட்புறத்தை பார்த்துக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவனை கிராம மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
இன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற மேற்படிச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த இளைஞர் மேற்படி தில்லையம்பதி ஆலயத்திற்க்கு அருகிலுள்ள வீடொன்றின் ஜன்னல் கதவின் வழியே வீட்டை அவதானித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதனை அவதானித்த கிராமமக்கள் இதனை இரகசியமாக தொடர்ந்து அவதானித்ததோடு மக்களைக் கூட்டி உடனடியாக தப்பித்து ஓட முடியாத படி மடக்கிப் பிடித்துள்ளனர்.
பிடிபட்டவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் என பின்னர் மக்கள் அறிந்துள்ளனர்.
உடனடியாக அங்கு கூடிய இளைஞர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின்னர் மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதனை அறிந்து கொண்ட இராணுவத்தினர் உடனடியாக அழையா விருந்தாளிகளாக அங்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து கிராமத்திலுள்ள சனசமுக நிலைத்தினுள் குறித்த இளைஞனை வைத்துப் பூட்டிய சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் விட மறுத்துள்ளனர். எனினும் அவனை வெளியில் விடுமாறு இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர்.
இதற்கு உடன்படாத மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து அங்கு வந்த கோப்பாய் பொலிஸார் குறித்த இளைஞனை மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட போது குறித்த இடத்திற்க்கு வந்த இராணுவ அதிகாரியொருவர் குறித்த இளைஞனை சனசமுக நிலையத்திற்குள் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதன்போதும் கூட குறித்த இளைஞர் எதுவும் பேசவில்லை, எனினும் பின்னர் சிங்கள மொழியில் இராணுவத்தினருடன் ஏதோ உரையாடினான்.
இதேபோல் அங்கு வந்த படையினர் சிலர் கையில் பொல்லுகளுடன் வந்து மக்களை தாக்க முற்பட்டுள்ளனர்.
குறித் இளைஞன் சேட்,ஜீன்ஸ், காலில் செருப்பு அணிந்திருந்துள்ளான்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து மர்மமனிதன் நடமாட்டத்தால் அச்சமடைந்த சூழலில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten