தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 september 2011

வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது : படையினர்

[ சனிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2011, 03:42.47 AM GMT ]
வடக்கில் நிறுவப்பட்டுள்ள எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பு நோக்கத்திற்காக வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த கோரிக்கை தொடர்பில் பாதுகாப்புச் செயலளார் கோத்தபாய ராஜபக்ஷ கவனம் செலுத்தி வருவதாக குறித்த சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten