தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணையவழி காணொளியூடாக இடம்பெற்றிருந்த ஊடக மாநாட்டிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்திய சிறிலங்கா விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானதொரு விடயமாக கருத்தபடுவதோடு, இந்தியா மத்திய அரசினை நோக்கிய அழுத்தங்கள் தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் வலுத்தவரும் நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரனது இக்கருத்து வெளிவந்துள்ளது.
ஐ.நா மனிதி உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு எதிரான வலுவானதொரு தீர்மானத்தினை இந்தியா கொண்டுவருமெனில், உலக சமூகமும் அதனைப் பின்தொடரும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்தியாவிற்கான அவைப்பிரதிநிதியும் நா.தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் அமைப்பாளருமான பேராசிரியர் சரஸ்வதி அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்த இந்த ஊடக மாநாட்டில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கிய கருத்துக்களின் சுருக்கம் :
தமிழக மாணவர் பேராட்டங்கள் :
தமிழகத்தில் உணர்வெழுர்சியுடன் நடந்துவரும் 'மாணவர் போராட்டத்தை' பாராட்டிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மாணவர்கள் மட்டுமே ஒரு இனத்தின் விடுதலைக்கு, எழுச்சியை ஏற்படுத்தும் சக்திகள் என்றார். மேலும் மாணவர்களால மட்டுமே, இந்திய அரசை நிர்ப்பந்திக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் ஈழத் தமிழர் மீது நடந்தது ஒரு 'இனப் படுகொலையே' என்பதை பலமுறை வலியிறுத்தி வி.உருத்திரகுமாரன் அவர்கள், அத்தகைய இனப் படுகொலையை எதிர்த்து ஐ.நா.மனித உரிமைச்சபையில், இந்திய அரசு 'அனைத்துலக சுயாதீனமான விசாரணையை' முன்னெடுக்க வலியுறுத்தும் வகையில், தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்பதை, தாய்த்தமிழக மாணவர் போராட்டங்கள் மூலமும், மக்கள் போராட்டங்கள் மூலமும், வலியுறுத்த வேண்டும் என்றார்.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலை :
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள், 'வலுவான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவிட்டால் ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் எனக் கூறியிருப்பதை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது எனத் தெரிவித்த அவர், அந்த முடிவில் திமுக தலைவர் உறுதியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், தமிழக சட்டமன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 'அனைத்துலக விசாரணை, சிறிலங்காவுக்கு மீது பொருளாதார தடை' ஆகியவனற்றை கோரியிருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
அதேபோல, தமிழக ஆளுநர் உரையிலும், முதல்வரின் உரையிலும், 'இலங்கையில் நடந்தது ஒரு இனப் படுகொலையே' என்பதை கோரியிருப்பது வரவேற்க தக்கது எனத் தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் இந்திய மத்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
உலக சமூகம் :
உலக நாட்டு அரசுகள் சிறிலங்காவினை எதிரி நாடாக கருத தயாராயில்லை. தங்களது அரசின் நலனில் நின்று கொண்டு, இலங்கைக் பிரச்சனையை அணுகுகின்றன. .அதனால்தான் தெரிந்து இருந்தும், 'இனப்படுகொலை' என்ற சொல்லை பயன்படுத்த மறுக்கின்றன. அவர்கள் தங்களது அரசுகளின் நலனில் நின்று பார்ப்பதை மாற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அவர்களது நலனும், நமது கோரிக்கையும், சேரும் இடங்களை நாம் கண்டு அணுக வேண்டும்.
உலகத் தமிழர்கள் :
தாய்த:தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலக தமிழர்களின் தாகமாக் மாறியுள்ளது.
கேள்வி பதில் :
தமிழீழத்தை பெற்று தர இந்திய முயலவேண்டும்.தமிழீழத்திற்கு இந்திய அரசு உதவினால், அது காஷ்மீரை இந்தியா தனிநாடாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற குரலை வலுப்படுதுவதாக ஆகுமே? என்ற கேள்விக்கு, காஷ்மீர் விவிகாரம் வேறு, ஆனால் இலங்கையில் நடந்தது 'இனப்படுகொலை'.
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் 'இடைக்கால' அரசாங்கம் என்ற கேள்விக்கு, சுனாமி வந்தபோது, அழிவுகளில் சிக்கிய மக்களை மீட்க, புலிகள் உலக சமூகத்தின் உதவிகளை கொழும்பு மூலம் கொடுக்காதீர்கள் என்ற கோரிக்கையை வைத்தார்கள். அதேபோல இப்போது 'மீள்குடியேற்றம்' விரும்புவோர், கொழும்பு மூலம் அதை கொடுத்தால் அது தமிழ் மக்களுக்கு போய் சேராது .
உலக நாடுகள் வடக்கு-கிழக்கு பகுதிகளான தமிழர் தாயகப் பிரதேசங்களில் தங்களது 'தூதரகங்களை'திறக்க வேண்டும்.
சுதந்திர தமிழீழ பேராட்டத்திற்காக தமிழகத்தில் ஈகமசெய்த முத்துகுமார் முதல் மணி வரையிலான உறவுகளுக்கு வணக்கம் செலுத்தி 'தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்' எனக் கூறி முடித்தார்.
இந்த ஊடக மாநாட்டில் மே-18 முள்ளிவாய்கால் நாளில் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனம் குறித்தான விளக்க கையேடு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
http://news.lankasri.com/show-RUmryDSdNZnp0.html
Geen opmerkingen:
Een reactie posten