தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 maart 2013

பலாலி விமானத் தளத்தை சர்வதேச விமானத்தளமாக தரமுயர்த்த அரசாங்கம் நடவடிக்கை!


பலாலி விமானத் தளத்தை சர்வதேச விமானத் தளமாக தரமுயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிவில் விமான போக்கு அமைச்சு அலுவலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த விமானத்தள அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
வடக்கின் அபிவிருத்திப் பணிகள் அரசினால் தற்போது மிக வேகமாக முன்னெடுக்க்ப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் பலாலி விமான நிலையம் சர்வதேச விமானத் தளமாக தாரமுயர்த்தப்படும் பட்சத்தில், வடபிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கு இது இது பாரிய உந்துசக்தியாக அமையும் என அரசு கருதுவதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலாலி விமானத்தளம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது. தற்போது இந்த விமானத் தளம் இராணுவ விமானப்படைத் தளமாகவே பெரும்பாலும் செயற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விமானத் தளத்தை சர்வதேச விமானத் தளமாக தரமுயர்த்தும் நோக்கில் அதனை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு கையேற்கத் திட்டமிட்டுள்ளது.
பாலாலி விமானத் தளம் சர்வதேச விமான நிலையமாக புனரமைப்புச் செய்யப்படுமிடத்து இங்கிருந்து இந்தியாவுக்கு அதிகளவான விமான சேவைகள் இடம்பெறும் சாத்தியம் உள்ளது.
வடபகுதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக இந்தியா சென்று வரும் நிலையில், இந்த மக்களின் போக்குவரத்து சேவையை இலகுபடுத்துவதற்கு இந்த விமான நிலைய விஷ்தரிப்பு உதவியாக அமையும் என அரசு கருதுவதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அலுவலக வட்டார தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten