தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

தனிப்பட்ட காரணங்களுக்காகவே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்!– யாழ். பிரதி பொலிஸ்மா அதிபர்(யாழ்.செய்திகள்)


யாழ்.குடாநாட்டில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக புலன் விசாரணைகள் மூலம் அறிய முடிகின்றதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்துள்ளார்
யாழ்.பொலிஸ் தலமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் வலம்புரி மற்றும் தினமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வாய்மூல விசாரணைகளின் போது அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்களைத் தாக்கியவர்களின் நோக்கத்தை புரியவில்லை எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாடுகளை தீர விசாரணைக்கு உட்படுத்திய போது ஒரு உண்மை புலனாகின்றது.
சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள வீடுகளிலும் கடைகளிலும் மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையின் போது தாக்குதல் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நடைபெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.
இருந்தும் எமது விசாரணை முடியவில்லை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றேன். தாக்குதல் காரர்களைக் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.
தாக்கியவர்கள் தொடர்பில் முறைப்பட்டுக் காரர்களான ஊடகவியலாளர்கள் முழுமையான தகவலைத் தரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
யாழில் வீதி அபிவிருத்திக்கு பின்னர் தான் விபத்துக்களும் அதிகரிப்பு
யாழ்.மாவட்டத்தில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுபடும் தனியர் மற்றும் அரச நிறுவனங்கள் பிரயாணிகளுக்குரிய பிரயாண விதிகளை வீதிகளில் சரியான முறையில் வைக்கத் தவறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருணரட்ன தெரிவித்தார்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் எங்கும் வீதி அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த வீதி அபிவிருத்திப் பணிகளின் பின்;னர் தான் யாழில் விபத்துக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது.
அண்மையில் கூட கைதடிப் பாலத்தடியில் இரு சகோதர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இது வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனங்களின் தவறினாலே இந்த விபத்தில் இரு உயிர்கள் இழக்கப்பட்டுள்ளது
வீதியில் அபாய எச்சரிக்கைகள் இல்லை, வீதி விதிகள் அறிவுத்தும் பதாதைகள் கூட இல்லை. இவ்வாறான சம்பவங்களினாலேயே வீதி விபத்துக்கள் நடைபெறுகின்றது.
இனியும் இவ்வாறான உயிர்கள் இழக்க இடம் கொடுக்க முடியாது. யாழில் வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் அதிகாரசபைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஒப்பந்தகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை அவர்கள் மீது சட்டம் பாயும் எனவும் அவர் யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருணரட்ன குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் காசோலை மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள்
யாழ்.மாவட்டத்தில் காசோலை மோசடிகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மோசடியில் ஈடுபடுபவர்கள் வர்த்தக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
யாழ்.வல்வெட்டித்துறையில் 33  லட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை வியாபார நோக்கோடு 46 லட்சம் ரூபா காசோலை மோசடி ஆதிகோயிலடி வல்வெட்டித்துறையில் நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.நகரப் பகுதியிலுள்ள கடை ஒன்றில் மோசடியான முறையில் காசோலையைக் கொடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தவர் கைது செய்யப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
வர்த்தகர்கள் இந்த காசோலை மோசடிகளில் ஈடுபடுவதால் அவர்களின் வணிகமும் பாதிப்படையும். அத்தோடு அவர்களின் சுயகௌரவமும் பாதிப்படைய வாய்ப்புக்கள் இருபதாக அவர் குறிப்பிட்டுக் கூறியதுடன் இவ்வாறான மோசடிகளைத் தவிர்க்குமாறு யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் கருணாரட்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten