தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

யார் தடுத்தாலும் தமிழர்களுக்கான ஒரு அரசு உலகில் மலர்ந்தே தீரும்!- தமிழர் நடுவம் சுவிஸ்


ஐ.நா மனித உரிமை குழுவினால் இலங்கை அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கமாக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவோ, யுத்த குற்றங்களுக்கெதிராகவோ தீர்மானத்தை நிறைவேற்றாமல்,
 சிங்கள அரசுப்படைகளால் தமிழர்களின்மேல் நடாத்தப்பட்ட இனவழிப்பிற்கெதிராக தீர்மானங்களைக் கொண்டுவரவேண்டும், இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நாவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதுமாக சட்டக்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களால் உண்ணாவிரத போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்பு என்ற அமைப்பினால் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இலங்கை அரசுக்கெதிரான வன்முறையற்ற அமைதிவழி போராட்டங்கள் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டத்தில் காலத்தின் தேவை கருதி முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எமது புரட்சி வாழ்த்துகள்.
"இலங்கையில் நடைபெற்றது வெறும்போர் குற்றமோ மனித உரிமைமீறலோமட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை, சர்வதேச விசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு, சர்வதேசவிசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்" போன்ற கோசங்களை எழுப்பியவண்ணம் உண்ணாவிரத போராட்டங்களையும், சாலை மறியல் போராட்டங்களையும், முற்றுகைப் போராட்டங்களையும் மாணவர்கள் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகமும் தமிழீழமும் பிரிக்க முடியாத உறவுகள் என்பதற்கு இம்மாணவர் போராட்டங்கள் மிகப் பெரிய சாட்சியாக நிற்கின்றது. இனி யார் தடுத்தாலும் தமிழர்களுக்கான ஒரு அரசு உலகில் மலர்ந்தே தீரும். இன்று மாணவர்கள் செய்யும் புரட்சி தமிழர் வரலாற்றில் எழுதப்பட வேண்டிய எழுச்சி மிகு திருப்புமுனை.
ஈழத்தமிழர்களான தமது தொப்புள்கொடி உறவுகளுக்காக பலவிதமான போராட்டங்களை நடாத்தும் தமிழ்நாட்டு மாணவ சமூகத்திற்கு ஈழத்தமிழர் சார்பாக எமது அமைப்பான தமிழர் நடுவம் சுவிஸ் முழுமையான ஆதரவையும், நன்றிகளையும் தெரிவிப்பதோடு நாம் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள், மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும் அங்காங்கே அடையாள போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். என சுவிஸ் தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten