தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

ஜனாதிபதியிடம் தி.மு.க. ஆதரவு வாபஸ் கடிதம் வழங்கியதையடுத்து பிரதமர் - சோனியா அவசர ஆலோசனை


ஐக்கிய முற்போக்கு கூட்‌டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதத்தினை நேற்றிரவு 10.30 மணியளவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்த டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் வழங்கினர்.
அத்துடன், இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க. அமைச்சர்களும் தங்களது இராஜினாமா கடிதத்தினை வழங்க உள்ளனர்.
இதற்கிடையே ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த டி.ஆர்.பாலுவிடம், 'ஆதரவை வாபஸ் பெறும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா?' என நிருபர்கள் கேட்டனர்.
ஆதரவை வாபஸ் பெறும் கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கிய பிறகு மறுபரிசீலனைக்கு எங்கே இடம் உள்ளது? என அவர் பதில் அளித்தார்.
ஜனாதிபதியை டி.ஆர்.பாலு சந்தித்துவிட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் அவசரமாக நடைபெற்றது.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும், தி.மு.க.வின் கோரிக்கை குறித்தும் தீவிர ஆ‌லோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து டில்லி அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. திருத்தங்களை ஏற்றால் பரிசீலிப்போம் என கருணாநிதி அறிவித்திருப்பதால் இன்றும் திடீர் அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் மற்றும் மூத்த கபினட் மந்திரிகள் பங்கேற்றனர்.
2ம் இணைப்பு
திமுகவை சமாதானப்படுத்த நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து தீர்மானம்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற திமுக முடிவு செய்துள்ளதை தொடர்ந்துஇ அக்கட்சியை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் நோக்கில் இத்தீர்மானத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த தீர்மானத்தை வரைவு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி இன்று அறிவித்த பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கூட்டத்தில் இலங்கைகு எதிராக வலுவான தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும், அப்படி கொண்டுவந்தால் திமுக தனது விலகல் முடிவை மறு பரிசீலனை செய்யும் என்றும் கருணாநிதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Geen opmerkingen:

Een reactie posten