தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 maart 2013

தமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதற்கு இலங்கை கடும் கண்டனம்


இந்தியாவின் தமிழகத்தில் பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதேவேளை, பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கடும்போக்காளர்களால் இலங்கையர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த தனது கடுமையான எதிர்ப்பினை இலங்கை அரசாங்கம், இந்தியாவிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஊடாக இந்திய மத்திய அரசாங்கத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகத்தின் தஞ்சாவூர் மற்றும் சென்னைக்குச் சென்ற யாத்திரிகர்கள் மற்றும் இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்துக் கவலையடைவதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்துக்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் செல்வதற்கு முன்னர் தமிழகத்திலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டுச் செல்லுமாறும் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmryDRUNZnp6.html

Geen opmerkingen:

Een reactie posten