தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 april 2014

தமிழ் இணையங்களே தமிழர்களுக்கு பெரும் உதவிகளைப் புரிகிறது: பிரித்தானிய எம்.பி !

நேற்றைய தினம் மாலை, பிரித்தானியாவில் நடைபெற்ற "உலகத் தமிழர் இணைய மாநாட்டில்" நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டார்கள். இதில் ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், எம்.பீக்கள் , கவுன்சிலர்கள், தமிழ் பிரமுகர்கள் மற்றும், செயல்பாட்டாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இம் மாநாட்டில் கலந்துகொண்டு அங்கே உரையாற்றிய சோபி மக்டொனா எம்.பி அவர்கள், ஈழத் தமிழர்களுக்கு, தமிழ் இணையங்களே பெரிதும் உதவுவதாக தெரிவித்துள்ளார். தமிழர்களின் பிரச்சனையை உலகறியச் செய்ய, தமிழ் ஊடகங்கள் பாடுபட்டு வருவதாகவும், அதில் இணையத்தளங்கள் பெரும் பங்காற்றி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஈழத் தமிழர்களோடு இணைந்து நீண்ட நாடகளாகச் செயல்பட்டு வரும் சோபி மக்டோனா அவர்கள் தெரிவித்த கருத்துகள், தமிழ் இணையப் பரப்பில் உள்ள ஊடகவியலாளர்களை பெரிதும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது. அத்தோடு ஹாரோ பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கரட் தாமஸ் அவர்களும் அங்கே உரையாற்றியிருந்தார். இலங்கையில் நடைபெறும் துயரமான நிகழ்வுகளை தமிழ் இணையங்களே பெரும்பாலும் வெளியே கொண்டுவருகிறது என்றும், அதன் சேவை மேலும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம். "உலகத் தமிழர் இணைய" மாநாடு சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் தாம் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக உலகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்(GTAJ) தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

































http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6635

Geen opmerkingen:

Een reactie posten