தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 5 april 2014

பெண் சிப்பாய்களை துன்புறுத்திய நான்கு இராணுவ அதிகாரிகள் கைதாம் !

பெண் இராணுவ சிப்பாய்களை துன்புறுத்திய நான்கு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்றுக் கொண்ட பெண் இராணுவச் சிப்பாய்களை உயர் அதிகாரிகள் துன்புறுத்தும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவ அதிகாரிகளை இரர்ணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர், நான்கு இராணுவ அதிகாரிகளிடமும் விக்ரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் பெண் இராணுவச் சிப்பாய்களே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும், இந்த சம்பவம் 2012ம் ஆண்டில் இடம்பெற்றதாகவும், தமிழ் பெண்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் இராணுவம் அறிவித்துள்ளது. ஒழுக்க மீறல்களில் ஈடுபட்ட பெண் சிப்பாய்களுக்கு, உயர் அதிகாரிகள் தண்டனை விதித்த காட்சிகளே இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருந்தது.


இலங்கை அரசின் அடுத்த கட்டுக்கதை இது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். குறிப்பிட்ட அதிகாரிகள் இப்படிக் கைதானாலும் அவர்களை இலங்கை அரசு ஒன்றும் செய்யப்போவது இல்லை.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6633

Geen opmerkingen:

Een reactie posten