தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் மலேஷியாவில் கைது

அம்பாறை கேசங்கேணி கிராமவாசிகளுக்கு மாற்றுக் காணி: அரசாங்கம் உறுதி
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 03:14.06 PM GMT ] [ பி.பி.சி ]
இலங்கையின் கிழக்கே அம்பாறை ஒலுவில் கேசங்கேணி கிராமத்தில் இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படவிருப்பதால் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ள மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் நாட்டின் உச்சநீதிமன்றத்துக்கு உறுதிமொழியொன்றை வழங்கியுள்ளது.
கேசங்கேணி மக்கள் தாக்கல் செய்த மனு சம்பந்தமாக அரசாங்கம் உச்சநீதிமன்றத்துக்கு எழுத்து மூலமாக பதில் வழங்கிய நேரத்தில் சட்ட மா அதிபர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இராணுவ முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதால் கிராமங்களை விட்டு வெளியேறச்சொல்லி 2011ல் தமது ஊருக்கு வந்த இராணுவத்தினர் உத்தரவிட்டதாக மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
சம்பந்தப்பட்ட இடங்களில் மனுதாரர்கள் சட்ட அனுமதியின்றி வாழ்ந்து வருவதால் அந்த இடங்களைக் கையகப்படுத்த இராணுவத்துக்கு உரிமை உள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. ஆனாலும் வெளியேற்றப்படும் மக்களுக்கு மாற்று காணிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என சட்ட மா அதிபர் உறுதி வழங்கியுள்ளார்.
அவ்வாறு அரசாங்கம் வழங்குகின்ற மாற்றுக்காணிகளை பெற்றுக்கொள்ள மனுதாரர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பு பதிலை ஆராய்வதற்காக இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 23 தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWeu7.html
விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தலைவர் மலேஷியாவில் கைது
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 10:38.34 PM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டாரென கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வலைமையப்பின் பிரதி தலைவர்களில் ஒருவராக நந்தகோபன் செயற்பட்டு வந்தார்.
தென் கிழக்காசியாவை தளமாக கொண்டு இவர் இயங்கினார். இவரது போலி கடவுச்சீட்டுடன் மலேசியாவிலிருந்து புறப்பட்டு தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு செல்லவிருந்தார். நந்தகோபன் தெஹ்ரானில் இருப்பதை தென்கிழக்காசிய தகவல் வாட்டாரமொன்று இலங்கைக்கு தெரியப்படுத்தியது.
இலங்கை கேட்டுகொண்டதால் ஈரானிய அதிகாரிகள் நந்தகோபனை தெஹ்ரான் விமான நிலையத்தில் தடுத்தனர். தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படாததனால் இவர் மலேஷியாவிலிருந்து திரும்பிப்போனார்.
கோலாலம்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்கிய இவரை மலேஷிய அதிகாரிகள் தடுத்துவைத்தனர். இதே சமயம் இலங்கை அதிகாரிகளின் நந்தகோபன் தொடர்பாக மலேஷியா சென்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் நந்தகோபனை கைதுசெய்து இலங்கைக்கு மார்ச்சு மாதம் 6 ஆம் திகதி கொண்டு வந்தனர்.
ஷெல் வீச்சினால் காயமடைந்த நந்தகோபான் ஊன்று கோல் உதவியுடன் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETbLWev0.html

Geen opmerkingen:

Een reactie posten