அலுத்கம கந்தேவிஹார பிரதேசத்தில் வைத்து இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
35 ஆண்களும் 5 பெண்களும் நான்கு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2ம் இணைப்பு
படகின்மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 61 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு, கதிரவெளி கிழக்குக் கடற்பரப்பில் வைத்து மேற்படி 61 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மதுஷன் - 2 என்று பெயரிடப்பட்ட படகிலேயே இவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்வர்களில் 60 தமிழர்களும் சிங்களவர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில், 43 ஆண்களும் 8 பெண்களும் 10 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
படகுடன் சேர்த்து நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருகோணமலை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten