தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

வவுனியாவில் தேர்த் திருவிழாவுடன் பிறந்த வித்தியாசமான விஜய புது வருடம்!


வவுனியாவில் தேர்த் திருவிழாவுடன் பிறந்த வித்தியாசமான விஜய புது வருடம்!

வவுனியாவின் பிரசித்தி பெற்ற வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழா இன்று (14) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
வருடப்பிறப்பான இன்று இடம்பெற்ற இத் தேர்த்திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்கதர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததுடன் பலர் தீச்சட்டி எடுத்தும் அங்கட்பிரதட்சனை செய்தும் தமது நேர்த்திக்கடனை நிறைவு செய்திருந்தனர்.
இதேவேளை வருடப்பிறப்பை முன்னிட்டு வவுனியாவில் இந்து, பௌத்த ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten