தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

சிரிய இராணுவம் முற்றுகையை உடைத்தது !



சிரியாவில் ராணுவத்துக்கு எதிராக போராடிவரும் போராளி அமைப்பினரின் காவல் முன்னரணை (சென்ட்ரி) கைப்பற்றி விட்டதாக சற்றுமுன் சிரியா அரசு அறிவித்துள்ளது. சிரியாவின் முக்கிய வேகப்பாதையை கைப்பற்றிய போராளி அமைப்பினர், அதற்கு அருகில் இந்த காவல் முன்னரணை அமைத்து இருந்தனர். இதனால் பல இடங்களில் சிரிய இராணுவத்தினர் முடங்கிப்போய் இருந்தார்கள்.

சிரியா, இட்லிப் மாகாணத்தில் உள்ள இரு ராணுவ முகாம்களான வாடி அல்-டெய்ஃப், ஹமீடியா ஆகியவற்றில் இருந்து ராணுவ வீரர்கள் வெளியே வராத வகையில் போராளி அடைப்பினர் இரு முகாம்களையும் முற்றுகை இட்டிருந்தனர். இந்த முற்றுகையை நேற்றிரவு உடைத்துக் கொண்டு வெளியேறிய சிரியா ராணுவத்தினர், போராளி அமைப்பினரின் காவல் முன்னரணை சற்றுமுன் கைப்பற்றி விட்டதாக சிரியா அரசு செய்தி ஏஜென்சி அறிவித்துள்ளது.

சிரியா அரசு சார்பு பத்திரிகையான அல்-பாத் நேற்று வெளியிட்ட செய்தியில், ராணுவ முகாம்களுக்கு உள்ளேயிருந்து ராணுவத்தினர் தாக்குதல் தொடங்கி விட்டதாகவும், போராளி அமைப்பினரின் எதிர் தாக்குதல் பலவீனமான நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. அரசு சார்பு பத்திரிகையில் வெளியான அந்த செய்தியை சர்வதேச மீடியாவே நம்பவில்லை. ஆனால், தற்போது, அந்த செய்தியும் உறுதியாகியுள்ளது. முற்றுகையிடப்பட்டு இருந்த ராணுவ முகாம்களை விட்டு வெளியே வந்த ராணுவத்தினர் தற்போது மாரத் அல்-நுவாமான் நகரத்துக்கு வெளியே யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நகரம் வீழ்ந்தால், தற்போது போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான வேகப்பாதையும் ராணுவத்தின் வசம் சென்றுவிடும்.

இந்த வேகப்பாதைதான், தலைநகர் டமாஸ்கஸை, அலீபோ நகருடன் இணைக்கிறது. சிரியாவில் போராடிவரும் இப் போராளிகளுக்கு அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ஆதரவு காணப்பட்டது. இருப்பினும் இப் போராளிகளுக்கு இடையே பல பிரிவுகள் ஏற்பட்டதை அடுத்து, சில போராளிகள் அமெரிக்காவையும் மேற்குலக உதவியோடு போராடவேண்டும் என்றார்கள். ஆனால் மற்றைய பகுதி அமெரிக்காவையும் மேற்குலகையும் எதிர்க்கவேண்டும் என்றார்கள். இவர்களுக்கு இடையே எப்போது கருத்துவேற்றுமை ஆரம்பித்ததோ அப்போதே அவர்கள் அழிவுப் பாதையும் வகுக்கப்பட்டு விட்டது. தற்போது சிரியப் போராளிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்கள். அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடம் இருந்து ஆயுதங்களைப் பெற்று, முதலில் போராட்டத்தில் வெற்றியீட்டி, பின்னர் தாம் நினைத்ததைச் செய்திருக்கலாம். ஆனால் அப்படியான ஒரு மதி நுட்ப்ப செயலில் அவர்கள் இறங்கவில்லை. தமிழர்களைப் போல பல பிரிவுகளாகப் பிரிந்து, இறுதியில் மேற்குலக அனுசரணை வேண்டாம் என்றார்கள். இப்போது இன் நிலைக்கும் காரணமானார்கள் !

போராட்டம் தொடர்பான முடிவுகள் ஒரு சிலரால் எடுக்கப்படுவதாலும், எதிரியின் சூழ்ச்சி வலையில் நாம் சிக்குவதாலுமே தோல்வியை தழுவிக்கொள்கிறது.

Geen opmerkingen:

Een reactie posten