தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 april 2013

மாணவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு ? ஐபிஎல்-க்கு எதிராக வழக்கு !


சென்னையில் நடக்கும் ஐபிஎல் தொடரில் இலங்கையை சேர்ந்த வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து வழக்கறிஞர் புகழ்ழேந்தி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட எதிர்ப்பு தெரிவித்தவர்களின், தொலைபேசிகளை தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்று நவீன உபகரணங்களை கொண்டு ஒட்டு கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்கள், சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறையினரின் தொலைபேசிகளும் ஒட்டுகேட்கப்பட்டுள்ளதாக புகழேந்தி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களிலிருந்தும் போராட்டக் குழுவினருக்கு மிரட்டல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் புகழேந்தி புகாரின் பேரில் தற்போது சென்னை காவல்துறை ஐ.பி.எல்-க்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளது எனவும் அதிர்வு இணையம் அறிகிறது.


Geen opmerkingen:

Een reactie posten