இந்த இரட்டைக் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட புலனாய்வாளர்கள் கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர்.
புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சந்தேகத்தில் பெயரில் இந்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8ம் திகதி செங்கலடிச் சந்தி பதுளை வீதியிலுள்ள வீடொன்றில், செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி ரகு விப்ரா ஆகிய இருவரும் இனந்தெரியாத நபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான புலணாய்வு செய்தியை கடந்த 09.04.2013 எமது இணையம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது
மகளின் காதல் விவகாரத்தால் மட்டு செங்கலடி இரட்டைக் கொலை பணம் நகை அபகரிக்கப்படவில்லை கொலை செய்யப்பட்ட இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் முதல் பிள்ளையை விரும்பிய ஒருவரே இவ் நாசகார வேலையை செய்ததாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளை இக் கொலை தொடர்பாக காதலில் ஈடுபட்ட மகள் அறிந்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கும் நிலையில் உணவுடன் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணைகளில் நிரூபனமாகியுள்ள நிலையில் இக் கொலையுடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது
http://www.jvpnews.com/srilanka/21960.html
Geen opmerkingen:
Een reactie posten