நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் சில சந்தேகநபர்களுக்கு கைதுசெய்யப்பட்டுள்ள முகாமையளார் உதவி செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.சம்பவம் தொடர்பில் இதுவரையில் 14 பேர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள பணத்தை வங்கி அட்டைகள் மூலம், அரச வங்கிக்கு மாற்றிய சந்தேகநபர்கள் அவற்றை அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
சந்தேகநபர்களால் 29 கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் மெலும் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதேவேளை பாதிக்கப்பட்டவர்களில் தமிழர்கள் அதிகமாக உள்ளதாக சில தகவல்களும் கசிந்துள்ளது. எனவே வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், தாம் இலங்கையில் உள்ள வங்கிகளில் பணம் போட்டு வைத்திருந்தால் அவை சரியாக உள்ளதா என்று ஒருதடவை சோதித்து பார்த்தல் நல்லது.
Geen opmerkingen:
Een reactie posten