தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 14 april 2013

வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களை குடியேற்ற திட்டம்!


வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்கள குடும்பங்களை குடியமர்த்தவும், அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
ஜப்பான நாட்டின் இலங்கைக்கான விசேட தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட உயர்மட்ட அதிகாரிகளின் கலந்துரையாடலிலேயே இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இக்கலந்துரையாடலில் இவ்வாறு குடியேற்றப்பட உள்ளவர்களுக்கான பிரத்தியேகமான வீட்டுத்திட்டம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன.
குடியேற்றப்படவுள்ள தென்பகுதிப் பெரும்பான்மையினரின் குடும்பங்களின் விபரங்களையும் வீட்டுத்திட்டம் தொடர்பான விபரங்களையும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இக்குடியேற்றத்திற்கான ஒழுங்கமைப்பு வேலைகளை கவனிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் விசேட குழு ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமார் 9 லட்சம் பெறுமதியான வீடுகளை அமைத்துக் கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு வேலைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரத்தினை வீடமைப்பு அதிகார சபையினருக்கு வழங்குவது தொடர்பாகவும் இக்கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களை குடியமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கு இப்பகுதிகளிலுள்ள அரச நிலங்களை பயன்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten