[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 11:48.30 AM GMT ]
எந்த தருணத்திலும் அதன் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாமல் பாதுகாப்பது நாட்டை நேசிக்கும் அனைவரதும் கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொருட்டு அரசு கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக அனைத்து நிறுவன தொழிலாளர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாடு அபிவிருத்தி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் நாட்டு மக்களின் நலனுக்காக அபிவிருத்திக்காக பல திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் ரீதியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க நாட்டுக்குள் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இது குறித்து அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பொருட்டு அரசு கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 01:23.37 PM GMT ]
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 17 % வட்டி அடிப்படையில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிய ஆகியவற்றிடமிருந்து அரசாங்கம் 410 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மிகக் கூடுதலான வட்டி வீதத்தை செலுத்தியே இந்தக் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது, அரசாங்க வங்கிகளிடமிருந்து பாரியளவு கடன் பெற்றுக் கொள்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புக்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அரசாங்கம் மொத்தமாக ஒரு ட்ரில்லியன் ரூபாவினை கடனாகப் பெற்றுக்கொண்டுள்ளது. பாரியளவில் கடன் பெற்றுக் கொள்வதானது பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten