தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 april 2013

மணலாறில் சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதி! மஹிந்த வழங்கினார்!


போரின் போது மரபு ரீதியான போராட்ட உத்திகளே பின்பற்றப்பட்டன!– பாதுகாப்புச் செயலாளர்
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 06:09.15 AM GMT ]
இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது மரபு ரீதியான போராட்ட உத்திகளே பின்பற்றப்பட்டது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர்க் கப்பல்கள், நவீன ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட போர் வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் எதுவுமின்றியே முன்நகர்வுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
போர் தொடர்பான அனுபவஙக்ளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெலிஓயா (மணலாறு) பிரதேசத்தில் 3000 சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்குகிறார் மகிந்த
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 06:29.10 AM GMT ]
தமிழரின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பகுதியில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று காணி உரிமைப் பத்திரங்களை வழங்கவுள்ளார்.
மொரவெவ, ஹெலெம்பவெவ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள நிகழ்வில் காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன.
வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் எல் வலயம் என்ற குறியீட்டுடன் சிங்களக் குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மணலாறின் பெரும்பாலான தமிழ் கிராமங்களில் இருந்து 1984ம் அண்டு சிறிலங்கா படையினரால் தமிழர்கள் அடித்து விரப்பட்ட நிலையில், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
பின்னர், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களால் சிங்களக் குடியேற்றவாசிகள் கணிசமாக இடம்பெயர்ந்து சென்ற போதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர்  இலங்கை படையினர் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் விரட்டப்பட்ட பின்னர், மண்கிண்டிமலை (ஜனகபுர), நாயாறு, கொக்கிளாய் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று காணிகள் சொந்தமாக வழங்கப்படவுள்ளன
2ம் இணைப்பு
மணலாறில் சிங்களக் குடும்பங்களுக்கு காணி உறுதி! மஹிந்த வழங்கினார்
தமிழரின் பாரம்பரிய பிரதேசமான மணலாறு பகுதியில் குடியேற்றப்பட்ட 3000 சிங்களக் குடும்பங்களுக்கு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று காணி உரிமைப் பத்திரங்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு வெலிஒய சம்பத்நுவர மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

மொரவெவ, ஹெலெம்பவெவ, ஜனகபுர, கஜபாபுர, நாயாறு, கொக்கிளாய் பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்ற நிகழ்வில் காணி உறுதிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெலிஓயா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் எல் வலயம் என்ற குறியீட்டுடன் சிங்களக் குடியேற்றங்களை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
மணலாறின் பெரும்பாலான தமிழ் கிராமங்களில் இருந்து 1984ம் அண்டு  இலங்கை படையினரால் தமிழர்கள் அடித்து விரப்பட்ட நிலையில், அங்கு சிங்களக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.
பின்னர், விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களால் சிங்களக் குடியேற்றவாசிகள் கணிசமாக இடம்பெயர்ந்து சென்ற போதிலும், போர் முடிவுக்கு வந்த பின்னர்  இலங்கைப் படையினர் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவுடன் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் விரட்டப்பட்ட பின்னர், மண்கிண்டிமலை (ஜனகபுர), நாயாறு, கொக்கிளாய் கிராமங்களில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்களுக்கே இன்று காணிகள் சொந்தமாக வழங்கப்பட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten